பெருவை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி.! வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள்.! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா நாடான பெருவில் கடந்த வெள்ளிக்கிழமை யாகு எனப்படும் சக்திவாய்ந்த சூறாவளி தாக்கியத்தில் லம்பாயெக், பியுரா மற்றும் தும்பேஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  வெள்ளப்பெருக்கினால் ஏராளமான வாகனங்கள் மற்றும் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

மேலும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தும்பேஸ் பகுதியில் 3000 ஹெக்டர் விவசாய நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்துள்ளன.

இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கினால் இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் , 500க்கும் மேற்பட்டோர் வெள்ளப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட லம்பாயெக், பியுரா மற்றும் தும்பேஸ் பகுதிகளை அதிபர் டினா பொலுவார்டே பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் அவசரநிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hundred of people affected as Powerful cyclone hit Peru


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->