கிா்கிஸ்தான் தஜிகிஸ்தான் வீரர்களுக்கு இடையேயான மோதலில் பலி எண்ணிக்கை 24ஆக உயா்வு.! - Seithipunal
Seithipunal


மத்திய ஆசிய நாடுகளான கிா்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பிறகு தண்ணீர், அத்துமீறல் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனைகளினால் அவ்வப்போது இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஏற்பட்டு வரும் மோதலால் வன்முறையைத் தவிர்ப்பதற்காக கிட்டத்தட்ட 20,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இரு நாடுகளின் ராணுவ வீரர்களுக்கிடையே பயங்கர தாக்குதல் ஏற்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததுள்ளதாகவும், கிர்கிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதலுக்கு இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க இருதரப்பினரும் சமாதான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death toll rises to 24 in clash between Kyrgyzstan and Tajikistan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->