பெருவில் வேகமாக பரவும் பறவை காய்ச்சல்.! 55 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பறவைக்காய்ச்சல் என்பது குளிர்கால மாதங்களில் பறவைகளுக்கு பரவக்கூடிய ஒரு வகையான தொற்றுநோய். இது பறவைகளிலிருந்து பாலூட்டிகளுக்கும் பரவக்கூடியது. தென் அமெரிக்கா நாடான பெருவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சலால் 585 கடல் சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாக பெருவின் தேசிய விவசாய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விவசாய சுகாதார சேவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் ஏழு கடலோர இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகளில் 585 கடல் சிங்கங்கள் மற்றும் 55,000 காட்டுப் பறவைகள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலும் பெலிகான்கள், பென்குவின்கள் மற்றும் கடல் பறவைகள் அதிக அளவில் பலியாகி உள்ளன. மேலும் எச்.5.என்.1 வகை பறவை காய்ச்சலால் மூன்று கடல் சிங்கங்கள் மற்றும் ஒரு டால்பின் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இயற்கைப் பாதுகாப்புப் பகுதிகளில் மற்ற விலங்கினங்களுக்கும், பறவைகளுக்கும் பரிசோதனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

55000 sea birds and 585 sea lions died to birdflu in peru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->