காங்கோ: குழந்தைகள் உட்பட 22 பேர் கடத்தல்.! - Seithipunal
Seithipunal


மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பல ஆண்டுகளாக ஆயுதமேந்திய குழுக்கள் ஆட்சியை கைப்பற்றவும், இயற்கை வளத்தை கொள்ளை அடிக்கவும், தங்களது சமுதாய மக்களை காப்பாற்றவும் சட்டவிரோத காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காங்கோவின் பாஸ்-யுலே மாகாணத்தில் உள்ள அங்கோ பகுதியில் குழந்தைகள் உட்பட 22 பேரை ஆயுதமேந்திய குழுக்களால் கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், வெள்ளை சீருடை அணிந்த 7 ஏழு பேர் கொண்ட குழு அங்கோ பகுதியை சுற்றியுள்ள 3 கிராமங்களில் பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், பின்னர் குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேரை கடத்திச் சென்றுள்ளதாகவும் நகர நிர்வாகி அதிகாரிகள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தும் தங்கள் பகுதிக்கு முறையான பாதுகாப்பு அளிக்காததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஆங்கோ பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய குழுக்கள் செயல்பட்டு வரும் நிலையில், இதுவரை இந்த தாக்குதலுக்கும், கடத்தல் சம்பவத்திற்கும் யாரும் பொறுப்பேற்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 people including children abducted in congo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->