காலநிலை மாற்றம்: திடீர் கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு.! 22 பேர் பலி - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 5 நாட்களாக பெய்த கனமழையால் மத்திய சோமாலியா மற்றும் அதன் சுற்றியுள்ள நகரங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்களின் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் 2,19,000 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் கனமழை, வெள்ளப்பெருக்கால் இதுவரை 22 பேர் உயிரிழந்ததாகவும், 4,60,470 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் சோமாலியாவின் ஹிரான் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள் மற்றும் மருத்துவமனை, பள்ளி கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

22 died as flood lashes out somalia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->