சோமாலியாவில் வெள்ளப்பெருக்கு - 21 பேர் பலி.! ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் கனமழையால் கெடோ,nபர்தேர் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோமாலியாவின் முக்கிய நதிகளான ஷபெல்லே மற்றும் ஜூபாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 21 உயிரிழந்ததாகவும்,100,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அடிப்படை வசதிகள் இன்றி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா மனிதாபிமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மனிதாபிமான நிறுவனம் வெளியிட்ட தகவலில், கெடோ, பர்தேர் பகுதிகளில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், 200 கழிவறைகள், 6 சுத்திகரிப்பு மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் 4 பள்ளிகளை வெள்ளம் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் வெள்ளப்பெருக்கினால் 1,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மூழ்கியுள்ளதாகவும், 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளதாகவும், 53600 பேரின் குடும்பங்களின் தங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 killed and evacuted more than one lakhs people in flood in Somalia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->