கிா்கிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற மோதல்.! 2 பேர் பலி - Seithipunal
Seithipunal


மத்திய ஆசிய நாடுகளான கிா்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த பிறகு தண்ணீர், அத்துமீறல் மற்றும் எல்லை தொடர்பான பிரச்சனைகளினால் அவ்வப்போது இரு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து ஏற்பட்டு வரும் மோதலால் வன்முறையைத் தவிர்ப்பதற்காக கிட்டத்தட்ட 20,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மோதலில் 15 வயது சிறுமி உட்பட 2 பேர் உயிரிழந்ததாகவும், 87 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், கிர்கிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வன்முறையால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து 1,36,000 மக்கள் வெளியேற்றப்பட்டதாக கிர்கிஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தியதற்காக ஏற்பட்ட மோதலில் 55 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 died in Kyrgyzstan Tajikistan border violence


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->