கொட்டி தீர்த்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு.! 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடும் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு மாற்றப்பட்ட வருவதாகவும் மீட்புபணி மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும், இந்த மாதம் முழுவதும் அதிக மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மேலாண்மை குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

130 died as heavy rain and floods lashes out rawanda


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->