விழுப்புரம் அருகே துப்பாக்கி சூடு! இரத்தம் பீறிட்டு அடிக்கும் பரிதாபம்! வெடித்தது போராட்டம்! வீடியோ இணைப்பு!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே வீரமூர் ஏரியில் மணல் அள்ளிய மாட்டு வண்டி தொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் மாடு காயமடைந்து இரத்தம் சொட்ட சொட்ட நிற்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உண்டாகியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தின் அருகே வீரமூர் ஏரியில் மாட்டுவண்டியில் களிமண் அடிக்கும் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இது அந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. ட்ராக்டர்கள் வந்த பிறகு உழவுக்கு மாடுகள் பயன்பாட்டை விட்டதால், மாடுகள் வைத்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. 

ஆனால் அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவது சட்டபடி குற்றமாகும். இருப்பினும் தமிழகம் முழுவதும் மணல் கொள்ளைகள் நடைபெறாமல் இல்லை. அதனை தடுக்க செல்லும் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் கொலை செய்யபடுவதும் வழக்கமாகி போனது.  

கொள்ளையடிப்பவர்கள் மத்தியில் இவர்கள் வாழ்வாதார தேவைக்காக மணல் அள்ள சென்ற நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கக்கோரி, அப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுமாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாட்டின் முக பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தததில் பலத்த காயமுற்று சாலையில் நிற்பதை பார்ப்பவர்களின் மனதை பகீர் என அதிர்ச்சியடைய வைக்கிறது. இதில் அந்த தொழிலாளர்கள் உயிர் பிழைத்தது மிகவும் அறிய அதிஷ்டம் என்றே சொல்லபடுகிறது. மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட கூடையில் கூட குண்டுகள் பாய்ந்துள்ளது. 

அதிகாலையில் போலீசார் சுட்டதாக தான் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர் .ஆனால் இது யார் சுட்டது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பவ இடத்தில் எஸ்பி அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் போலீசாருக்கு தொடர்பு இல்லை என்றும், வனத்துறையினர் சுட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் அதிக நபர்கள் உள்ளனர்.  அவர்கள் துப்பாக்கி வைத்து இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் சுட்டார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர் கூடிய விரைவில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று எஸ்பி  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

villupuram people protest for unknown person firing the ox


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->