தூங்க இடம்பிடிக்க தகராறு! தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் மிதந்த தொழிலாளியால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


சென்னை கொண்டித்தோப்பு சுந்தரம் 2-வது தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். 51 வயது நிறைந்த இவர் மாதவரம் ரவுண்டானா அருகே மூட்டை தூக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். 

இவருடன்  கொல்கட்டா ஷாப் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும்  சுரேஷ் ஆகியோரும் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தனர். இவர்கள்  3 பேரும் வேலை முடிந்தவுடன் மாதவரம் அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் ஒன்றாக மது அருந்திவிட்டு அங்குள்ள எடைமேடை பகுதிக்கு அருகேயுள்ள குடிசையில் ஒன்றாக தங்கி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் 3 பேரும் மது அருந்திவிட்டு, தூங்குவதற்காக அந்த குடிசைக்கு வந்துள்ளனர் . குடிசையில் தூங்க இடம் பிடிப்பதில் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர்  தாக்கிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அன்பழகனும், சுரேசும் அங்கிருந்த கல்லை எடுத்து கோவிந்தராஜ் தலையில் போட்டுள்ளனர். இதில் அவர், தலை நசுங்கி சம்பவ இடதிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர்  இருவரும் அங்கிருந்து தப்பித்து  ஜி.எஸ்.டி. சாலையில் நடந்து சென்றபோது , ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த போலீசார், சந்தேகத்தின்பேரில் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

 அப்பொழுது அவர்கள் தூங்க இடம் பிடிப்பதற்காக கோவிந்தராஜ்  தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் திடீரென சுரேஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து  அன்பழகனை மட்டும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உயிரிழந்த  கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான அன்பழகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

younger killed friend for place problem for sleeping


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->