பெற்றோரை ஏமாற்றி, பேஸ்புக் காதலனை நம்பி சென்ற பள்ளி மாணவி!. கடைசியில் நேர்ந்த கொடூர சம்பவம்!. - Seithipunal
Seithipunal



பள்ளி மாணவி ஒருவர் பேஸ்புக் மூலம் காதலித்த காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியே வந்த காரணத்தால் நடுரோட்டில் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.

டார்ஜிலிங்கை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிஷா என்ற பள்ளி மாணவிக்கு பேஸ்புக் வாயிலாக இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். பின்பு அந்த நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த இளைஞனின் ஆசை வார்த்தைகளை நம்பி அந்த பெண், கடந்த ஜனவரி மாதம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சிறுமியை காணாமால் பதறிப்போன மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, மகள் எங்கே சென்றார் என தெரியாமல் தவித்து வந்தனர். பல இடங்களில் அவர்களும் தேடிவந்தனர்.

பணத்துடன் வெளியேறிய மாணவி அந்த இளைஞனுடன் கேரளா உள்ளிட்ட பல ஊர்களில் சுற்றித்திரிந்து விட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

ஆனால் இருவருக்கும் வேலை தெரியாத காரணத்தால் கம்பெனியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். செலவுக்கு கூட பணம் இல்லாததால் சாப்பாட்டிற்கு பிச்சை எடுக்கும் நிலை அந்த மாணவிக்கு ஏற்பட்டது.  மேலும் அந்த மாணவியை இளைஞன் அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளான்.

இந்தநிலையில் பக்கத்து வீட்டாரிடம் உதவி கேட்டார் அந்த பெண். அவர்கள் அந்த மாணவிக்கு உணவு வழங்கினர். காதலனை நம்பி பெற்றோரை ஏமாற்றியதை உணர்ந்த அந்த சிறுமி, அவர்களிடம் செல்போன் வாங்கி, தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, தன்னை மீட்கும்படி கெஞ்சியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து பதறியடித்து வந்த பெற்றோர் சிறுமியை மீட்டுள்ளனர். பெற்ற மகள் கஷ்டப்படுகிறாளே என துடித்துப்போன பெற்றோர் அவள் செய்த தவறை பொருட்படுத்தாமல் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அணைத்து மாணவிகளுக்கும் எடுத்துக்கட்டடக இருக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl beleved his facebook lover and she face lot of problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->