இதுவரை யாரும் செய்திடாத சாதனையை செய்த முதல்வர் எடப்பாடி!! பொதுமக்கள் மகிழ்ச்சி!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியின் கொள்ளளவு 47.50 அடியாகும். வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னை மக்களுக்காக குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதியில் இருந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால் வீராணம் ஏரி மொத்த கொள்ளளவையும் எட்டியுள்ளது.

இங்கிருந்து பாசனத்திற்கு மதகுகள் வழியாக சென்னைக்கு குடிநீருக்காக ராட்சத குழாய் மூலம் 74 அடிகள் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படப்படாததாலும், இரண்டு மாத வெயில் காரணமாகவும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைய தொடங்கியது.

சென்ற வாரம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் நாற்பத்தி 3.20 அடியாக இருந்தது. 39 அடியாக நீர்மட்டம் குறைந்து விட்டால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என்ற சூழ்நிலை உருவாகியது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவு திறந்துவிடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் கடந்த மாதம் 31-ஆம் தேதி அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து, அங்கிருந்து வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்பட்டது. இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 பள்ளி 40 அடியாக உயர்ந்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் 60 கன அடி நீர் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீராணம் ஏரிக்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் சுற்றுப்புறத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இல்லை. அங்கு கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

வீராணம் ஏரியை நம்பியே சென்னை மக்கள் இருக்கின்றனர். வீராணம் ஏரி கோடை காலத்தில் எப்பொழுதும் அதிகளவான வறட்சிக்குள்ளாகும். இந்த ஏரியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு வரட்சி இருக்கும். வீராணம் ஏரி தற்போது நிரம்பி உள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர். கோடை காலத்தில் முதல் முறையாக வீராணம் ஏரி நிரம்பி காணப்படுவது இதுவே முதல் முறையாகும். 

பொதுமக்களின் நலனை நினைத்து தமிழக அரசின் இந்த நடவடிக்கை அனைவரலாகும் பாராட்டபட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VEERANAM LAKE FILLED FIRST TIME AT SUMMER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->