திருச்சி மாவட்டத்திற்கு வருகின்ற மே 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
Trichy coming 6th May local holiday
திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற மே 6ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் வருகின்ற மே 6ஆம் தேதி காலை சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு மே 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மே 29ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Trichy coming 6th May local holiday