தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியை மூடச்சொல்லி வந்த அதிரடி உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்! கைப்பற்ற போகும் அதிஷ்டசாலி யார்?!  - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றாலும் அங்கேயும் அவருக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறதாம். தற்போது அவரின் பெயரில் உள்ள சொத்துகளுக்கு ஆபத்து வந்துள்ளது. அதன் காரணமாக சசிகலா தனது பங்குகளை வேறு நபருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கிறார் என்ற பகீர் தகவல் வெளிவந்துள்ளது. 

முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின்  தோழியாக இருந்த சசிகலாவின் பெயரில்  சொத்துகள் அதிகளவில் உள்ளன. மேலும் பல நிறுவனங்களில் அவருக்கு பங்குகள் இருப்பதாகவும் தெரிகிறது. அப்படி ஒரு நிறுவனமான மாவில் சாட்கம்  நிறுவனத்தில் சசகலாவிற்கு 70  முதல்  80 சதவித பங்குகள் உள்ளதாகவும் இந்த பங்குகளை தற்போது  வேறு ஒரு நபரின் பெயருக்கு மாற்ற முயற்சித்து வருவதாகவும் தெரிகிறது. 

அந்த குறிப்பிட்ட நிறுவனம் தான் முன்னாள் முதல்வர் பெயரில் உள்ள தனியார் தொலைக்காட்சியை நடத்தி வருகிறதாம். இந்தத் தனியார் தொலைக்காட்சியின் உரிமத்தை ரத்து செய்ய டெல்லியில் இருந்து  தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கிடைத்ததுள்ளது. 

அண்மையில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறையில் இருந்து குறிப்பிட்ட தொலைக்காட்சி அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் ‘உடனடியாக உங்கள் சேனலின் ஒளிபரப்பை நிறுத்து வேண்டும் என இருந்ததால் அங்குள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். உடனடியாக இந்த தகவல் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு தெரிவிக்கப்பட உடனடியாக ஒரு வழக்கறிஞரின் உதவியுடன் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு உத்தரவுக்கு தடை விதித்துள்ளார்கள் நீதிபதிகள்.

இதனால் நிம்மதி அடைந்த சசிகலா தரப்பினர். மத்திய அரசு தரப்பில் ஊழல் வழக்குகளில் உள்ளவர்கள் தொலைக்காட்சி நடத்துக்கூடாது என கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால்தான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலாவின் பங்குகள் இருக்கும் தனியார் தொலைக்காட்சியின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

இதனை தொடர்ந்தே மத்திய அரசு அடுத்தகட்டமாக நடவடிக்கை எடுப்பதற்குள் தன் பெயரில் உள்ள பங்குகளை வேறு நபருக்கு மாற்ற  சசிகலா முயற்சித்து வருகிறாராம். அந்த நபர் யாராக இருக்கும் என்பது சசிகலாவிற்கு மட்டும்தான் தெரியும் எனவும் கூறப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

top tamil channel get the order to close the channel


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->