உலக விளையாட்டு வீரர்களையே விழிபிதுங்க செய்யும் தமிழக மனிதர்..? 750 கிலோ மீட்டர்களை 8 நாட்களிலேயே நடந்து சென்று சாதனை..!! - Seithipunal
Seithipunal


750 கிலோமீட்டர்களை 8 நாட்களிலேயே  நடந்து சென்று சாதனை படைத்துள்ளார் கன்னியகுமாரியை சேர்ந்த நடை மனிதர் ராஜேந்திரன் என்பவர்.

கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும்.

நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப் பழக்கமும் தேவையானது ஆகும்.

நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. ஆனால் நடைபயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.

இன்று நாட்டில் பரவலாக உடற்பயிற்சி மையங்கள் துவங்கி செயல்பட்டு வருகிறது. உடற்பயிற்சிக்கென்றே எல்லா வித கருவிகளுடன் மையங்கள் செயல்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் உடற்பயிற்சி பழக்கம் அதிகரித்து வருகிறது.

உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது.இன்னும் பலர் உடற் பயிற்சி மையம் செல்ல இயலவில்லை எனினும், சைக்கிள் ஓட்டுதல் ,அல்லது நடந்து செல்வதனையோ கடைபிடிக்கின்றனர்.

சீனா, நெதர்லாண்ட், ஜப்பான் போன்ற நாடுகளில் வசதி இருந்தும் கூட, நடந்து செல்வது சைக்கிளில் செல்வதனையே பழக்கபடுத்திக் கொண்டுள்ளனர். நடை பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் ஒன்றாகும்.

நடைபயிற்சி எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். நடைபயிற்சியை பழக்கமாக்கிக் கொள்வதால் ரத்த ஓட்டமானது சீராகிறது.

நுரையீரல் சுவாசம் சீராகிறது.செரிமாணக் கோளாறு சீராகிறது. உடலை வலுப்படுத்துகிறது. நடைபயிற்சி என்பது நான்கு மணிநேரம் நீந்துவதற்கும், நான்கு மணிநேரம் டென்னிஸ் விளையாடுவதற்கு சமமாகும்.

இப்படிப்பட்ட நடையை தினமும் எண்பது கி.மீ வரை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார் ராஜேந்திரன்.

கன்னியாகுமரி மாவட்டம் களியாக்கவிளை, முன்டன் விளையை சேர்ந்த ராஜேந்திரன் இதுவரை எந்த வாகனத்திலும் பயணம் செய்யவில்லையாம்.

தன் கால்களை வாகனமாக்கி எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறார். 57 வயதிலும் இவரின் நடையை பார்த்து அந்த பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இத்தனைக்கும் அவருக்கு காலில் சிறிது குறைபாடு உள்ளது. ஒருவர் நடந்து 25 கி.மீ செல்கிறார் என்றால், இவர் அதற்குள் 35 கி.மீ தூரத்தை தாண்டி விடுவார் என்று பெருமிதத்துடன் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The man walked all the way from Kashmir to Kanyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->