தனுஷ்கோடி நினைவு நாள் இன்று.! பிரதமர் மோடி போட்ட திட்டம் மட்டும் நிறைவேறினால், அந்த தீவுக்கு பிறந்த நாளே கொண்டாடலாம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 54 ஆண்டுகளுக்கு முன், ராமேஸ்வரத்தை அடுத்து உள்ள தனுஷ்கோடி தீவில், இதே மாதம் (1964-டிசம்பர் 24) 23 ஆம் தேதிக்கும், 24 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நள்ளிரவில் தண்ணீரில் மூழ்கி பல உயிர்கள் பலியாகின.

ஆம் கடந்த 1964 ஆம் ஆண்டு இதே நாளில் (1964-டிசம்பர் 24) நள்ளிரவு 12.30 மணி அளவில் வங்க கடலில் உருவான புயல் கரை கடந்தது. அப்போது சுனாமி போன்று கடல் கொந்தளித்து அந்த தனுஷ்கோடி என்ற அழகிய நகரத்தை முற்றிலும் உருத்தெரியாமல் அழித்து சென்றது.

அந்த புயலின் பாதிப்புக்கு பின்பும் தனுஷ்கோடி நகரத்தின் மிச்சம் உள்ள அழகை பார்க்க சுற்றுலா பயணிகளாக மக்கள் வருகின்றனர். அவர்களுக்கு அந்த சோக வரலாற்றின் செய்தி சரிவர தெரியாது. ஆனால் எதோ ஒரு பேரழிவு மட்டும் நடந்துள்ளதை உணர்வார்கள். 

1964 க்கு பிறகு இது ஆளரவமற்ற தீவாக காட்சியளித்து வருகிறது இந்த தீவு. தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ரூ 24,000 கோடியில் திட்டம் தீட்டி வருகிறது. இது நடந்தால் இந்தியாவின் மிக அழகான ஒரு தீவாக மாறும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

 

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THANUSHKODI MOURNING DAY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->