ஓட ஓட விரட்டிய காவல் துறை.!! மணல் திருட்டை தடுத்த வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுக்கும் மாட்டுவண்டி.!!  - Seithipunal
Seithipunal


 

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஆற்றங்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தொடர் தகவல் கிடைத்தது. இதன் காரணமாக காவல் துறையினர் இரவு நேரங்களில் தொடர்ந்து தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று இரவு கொட்டக்குடி ஆற்று பகுதியில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஆற்றுப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் டிராக்டர்கள் நிற்பதை கவனித்தனர்.

இதனை கண்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்கையில்., மணல் அள்ளிக்கொண்டு இருந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி டிராக்டர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

மேலும்., மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் இந்த ஆய்விற்கு வந்த வட்டாட்சியர் திரு.ஆர்த்தியை அவதூறாக பேசியும்., கொலை மிரட்டலும் விடுத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த வட்டாட்சியரின் மனுவை ஏற்ற காவல் துறையினர்., உடனடியாக அங்கிருந்த 6 மாட்டு வண்டிகளையும் கைப்பற்றினர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்., மணல் தடுப்பை கண்டித்த வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RIVER SAND ROBBERY IN THENI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->