மழை வெள்ளத்தில் இழந்தவர்களுக்கு மறு சான்றிதழ் எப்போது.? - கல்வித்துறையின் முக்கிய தகவல்.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளத்திலும் கல்வி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் இழந்தவர்கள் மற்றும் சான்றிதழ்கள் சேதம்அடைந்தவர்களுக்கு பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கு அரசு  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதற்காக தமிழக அரசு https://www.mycertificates.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. அந்த இணையதள மூலம் விண்ணப்பிக்கவும், சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பிக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்தது. அந்த இணையத்தளம் வாயிலாக 8 மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் கோரி தற்போதுவரை 13,579 பேர் விண்ணப்பித்து இருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது . அவர்களில் 11,543 பேர் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்களுக்காகவும், 2,036 பேர் பள்ளி மதிப்பெண் சான்றிதழ்களுக்காகவும் விண்ணப்பித்துள்ளனர். 

அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் பதிவெண் குறிப்பிடாததால் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆயத்த பணிகளை கல்வித்துறை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Recertificates for those lost in flood by end of jan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->