அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு தாக்கப்பட்ட விவகாரம் - ஆர்.பி உதயகுமார் நேரில் ஆறுதல் .! - Seithipunal
Seithipunal


மதுரை அருகே கலவரக் கும்பலால் தாக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டிலிருந்து ரூ.5 லட்சம் பணம், 5 சவரன் நகை மற்றும் சில ஆவணங்கள் திருட்டு போனதாக போலீஸில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள எம்.சத்திரப்பட்டி அருகே கருவனூர் கோயில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம், திமுக கிளைச் செயலர் வேல்முருகன் தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலின் எதிரொலியாக, வேல்முருகன் தரப்பினர் கருவனூரிலுள்ள முன்னாள் எம்எல்ஏவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துச் சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலும் சுமார் பதினெட்டுக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே, முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டில் இருந்த ரூ.5 லட்சம், 5 சவரன் நகை மற்றும் சில ஆவணங்கள் திருட்டு போனதாக அவரது மனைவி பழனியம்மாள் போலீஸில் புகார் அளித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் பொன்னம்பலம் வீட்டுக்கு சென்று, கும்பலால் தாக்குதலில் சேதமடைந்த வாகனங்களை பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததத்தவது, "கருவனூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் மற்றும் அவரது குடும்பத்தினரை திமுக தரப்பினர் தாக்கி வீட்டைச் சேதப்படுத்தி உள்ளனர். அவருடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. வீட்டுக்குள் புகுந்து பத்திரங்களை எடுத்துசென்றுள்ளனர். சட்ட ரீதியாக அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

கோயில் திருவிழாவில் பங்காளிகளுக்கு இடையே நடைபெற்ற மோதல் தற்போது அரசியல் ரீதியிலான மோதலாக உருவெடுத்துள்ளதால் சம்பவ பகுதியில் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RB uthayakumar visit madurai ex MLA ponnambalam house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->