பழனி கோயில் சிலை மோசடி விவகார விசாரணையில்.. முன்னால் உதவி ஆணையரும் ஏன் சேர்க்கப் படவில்லை? - Seithipunal
Seithipunal


பழனியில் கடந்த 2004-ஆம் ஆண்டு, ஜெயலலிதாவின் ஆட்சியில், ஜனவரி 25-ஆம் தேதி நள்ளிரவில், அல்லுார் சிவாச்சாரியார் என்பவரால், 221 கிலோ எடை உள்ள தங்க சிலை, மூலவரின் முன்பாக வைக்கப் பட்டது.
    
அப்போதைய முதல்வரின் தோசத்தைப் போக்குவதற்காக, இந்த சிலை வைக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டது. இந்த சிலை மூலவர் சிலையை விட உயரமாக இருந்தது. அதனால், பக்தர்களால், மூலவரை தரிசிக்க இயலவில்லை.
    
மேலும், இந்த ஐம்பொன் சிலை, வைக்கப்பட்ட சில நாட்களிலேயே கருக்கத் துவங்கியது. இந்த சிலை வைக்கப்பட்டதற்கு பக்தர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    
அத்துடன், அந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக 40 இடங்களிலும் படு தோல்வி அடைந்தது. இதனால், தெய்வ குற்றம் என்று கருதப்பட்டு, அந்த ஐம்பொன் சிலை, பத்திரமாக ஒரு அறைக்குள் வைத்து பூட்டப் பட்டது.
    
தற்போது, அந்த சிலை செய்ததில் மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டு, ஸ்தபதி முத்தையா, முன்னால் இணை ஆணையர் கே.கே. ராஜா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
 
இதனை விசாரித்து வந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அவசரமாக வேறு பிரிவிற்கு மாற்றப் பட்டார். ஆனால், உச்ச நீதி மன்றம், அவரையே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
    
தற்போது, இந்த சிலை, பாதுகாப்பு கருதி, கும்பகோணம் நீதி மன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது. இந்த சிலையை வைக்கவும், எடுக்கவும் காரணமாக இருந்த, ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடரான உன்னி கிருஷ்ணன் பணிக்கர், அப்போதைய அறநிலையத் துறை ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையாளர் ஆகியோர், இந்த விவகாரத்தில் மிக முக்கியமானவர்கள்.
    
ஆனால், இந்த மூவரிடமும் ஏன் இன்னும் சிலை மோசடி தொடர்பாக, விசாரணை நடத்தப் படவில்லை?, இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்று பக்தர்களும், இந்த அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

palani temple idol scam investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->