திண்டுக்கல் : வீட்டை ஜப்தி செய்ய வந்த போலீசார்.! எதிப்புத் தெரிவித்து தீக்குளிக்க முயன்ற பெண்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி மூவேந்தர் காலனியை சேர்ந்த ஜீவா-மொக்கவீரம்மாள் தம்பதியினர். இவர்கள் சின்னாளபட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் மனைவி தமிழ்செல்வியிடம் கடந்த 1997-ம் ஆண்டு கடனாக ரூ.5.5 லட்சம் வாங்கியுள்ளனர். 

இதனை ஈடு செய்யும் வகையில் மொக்க வீரம்மாள் பெயரில் இருந்த வீட்டை தமிழ்செல்வியிடம் அடமானமாக எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஜீவா உயிரிழந்ததனால், தமிழ்செல்வி திண்டுக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கினார். 

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் படி, மொக்கவீரம்மாள் பெயரில் இருந்த வீடு தமிழ்செல்வி பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மொக்க வீரம்மாள், முறைப்படி வீட்டை காலிசெய்து தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் வீட்டை ஜப்தி செய்து கைப்பற்றுவதற்கு தமிழ்செல்வி, நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் வந்தார். 

அப்போது, மொக்க வீரம்மாளும், அவரது உறவினர்களும் வீட்டை ஜப்தி செய்ய விடாமல் தடுத்தனர். இதையடுத்து, தமிழ்செல்வி நேற்று மீண்டும் போலீசாருடன்  வீட்டை ஜப்தி செய்ய வந்தார். அப்போது மொக்க வீரம்மாள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அந்த நேரம் மொக்க வீரம்மாள் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிப்பதற்கு முயற்சிசெய்தார். அப்போது அங்கிருந்த போலீசார்  அவரை தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி வீட்டை சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindugal woman sucide attempt for Foreclosure of the house


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->