விவசாயிகளின் தலையில் கல்லை தூக்கி போட்ட தமிழக அரசு..!! இந்த வருடமும் எல்லாம் போச்சு..!! - Seithipunal
Seithipunal


குறுவை சாகுபடிக்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாது என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.42 அடியாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க இயலாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நாளாக பின்பற்றப்படுகிறது. அனால் இந்த வருடம் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில், பாசனத்திற்கு 90 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 39.42 அடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால் 7 ஆண்டாக குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. இந்த ஆண்டும் குறித்த தேதியில் தண்ணீர் திறக்காத காரணத்தால் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அச்சத்தில் தமிழக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்கள் குடிநீருக்காக மேட்டூர் அணை தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளன. உச்சநீதிமன்றம் உத்தரவுபடி கர்நாடக அரசு அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடமால் காலம் தாழ்த்தியதன் காரணமாகவே, மேட்டூர் ஆணை நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் பருவ மழையை மட்டும் நம்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mettur dam June 12 not opened


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->