பிரதமர் மோடி பிறந்த நாள் - கோவையில் 73 ஜோடிகளுக்கு தாமரை திருமண விழா.!  - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி பிறந்த நாள் - கோவையில் 73 ஜோடிகளுக்கு தாமரை திருமண விழா.! 

இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இந்த விழாவை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், "தாமரை திருமண விழா" என்ற பெயரில் எழுபத்து மூன்று ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர், மணமக்களுக்கு தாலியை, எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தினார். மேலும், திருமணம் செய்து கொண்ட 73 ஜோடிகளுக்கும் 73 விதமான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. 

அதாவது, தலா ஒரு நாட்டு மாடு மற்றும் கிரைண்டர், மிக்சி, பீரோ, கட்டில், மெத்தை, குத்துவிளக்கு, பூ, பழம், காய்கறிகள், பாய், வீட்டு பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. அவற்றை அண்ணாமலை புதுமண தம்பதிகளுக்கு வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

marriage to 73 couples for PM modi birthday special


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->