மீனவர்களுக்கு ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின்.. பரிசு.!  - Seithipunal
Seithipunal


மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் நடந்த படகு போட்டியில் வெற்றி அடைந்த மீனவ வீரர்களுக்கு திமுக எம்பி கனிமொழி பரிசு பொருட்களை வழங்கியுள்ளார். 

இன்று சர்வதேச மீனவர் தினமானது கடற்கரையில் வசிக்கும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி நடைபெற்றது. 

இந்த படகு போட்டியில் அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் 15 க்கும் மேற்பட்டோர் தங்களது படகுகளுடன் கலந்து கொண்டனர். இது 2 கடல் மயில் தூரம் வரை நடந்தது. 

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மீனவ வீரர்களுக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி வாஷிங் மெஷின் மற்றும் பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanimozhi Mp gift To fishers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->