திருச்சி வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.! கணவருக்கு தூக்க மாத்திரை வழங்கி உல்லாசம் அனுபவித்ததால் நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட ஆண் நபரின் சடலத்தை கண்டு பதற்றமடைந்த மக்கள்., விஷயம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை மேற்கொள்ள துவங்கினர். 

அந்த விசாரணையில்., கொலையான நபர் முசிறியை அடுத்துள்ள சிந்தம்பட்டியை சார்ந்த கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. இதனை அறிந்த காவல் துறையினர்., அவரின் மனைவியிடம் மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின்னர் முரணாக பதில் அளித்ததை அடுத்து., அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., கோவிந்தராஜிற்கும் எனக்கும் திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த தருணத்தில் பக்கத்து வீட்டுக்காரரான தங்கதுரை என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இதனால் நாங்கள் இருவரும் உல்லாசம் மேற்கொள்வதற்கு கணவருக்கு தூக்க மாத்திரையை சாப்பாட்டுடன் சேர்ந்து வழங்கி உல்லாசமாக இருந்து வந்தேன்., இந்த நிலையில் எங்கள் இருவரும் ஒரு நாள் கணவர் கண்டு கொண்டதை அடுத்து., பழக்கத்தை கைவிட கூறி என்னிடம் முறையிட்டார். 

இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து சம்பவத்தன்று கணவரின் வாயில் துணியை கட்டி இரும்பு கம்பியால் குத்தி., தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்து., உடலை வனப்பகுதியில் கொண்டு வீசினோம் என்று தெரிந்தார். இதனையடுத்து இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in trichy wife killed husband due to illegal affair


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->