நான் "கருப்பு பாரதியன்".. அண்ணாமலையின் நெத்தியடி பதில்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் அழகு பிரிவு தலைவராக இருக்கும் சாம் பிட்டோரா‌ முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசராக இருந்தவர். சமீபத்தில் சொத்துரிமை குறித்து அவர் பேசிய கருத்து பரபரப்பாக பேசப்பட்டது. அதனை கெட்டியாக பிடித்து கொண்ட பாஜக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை அபகரித்துக் கொள்ளும் என நரேந்திர மோடி விமர்சனம் செய்திருந்தார். 

இந்த கருத்து காங்கிரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திய நிலையில் சாம் பிட்ரோடா அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "இந்தியாவைப் போன்ற பல்வேறு தரப்பினர் வாழும் தேசத்தை நாம் சிறப்பாக வைத்திருக்க முடியும். 

கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் இருப்பவர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்றும் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. நாங்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக உள்ளோம்" என கூறியிருந்தார். 

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி ராகுல் காந்தி இதற்கு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதே போன்று பாஜகவினர் பலர் காங்கிரஸ் நிர்வாகியின் இத்தகைய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் "அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன் (இந்தியன்)" என பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai react Congress Sam pitroda comment


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->