எல்லாம் நாசமாக போச்சு.. நீதிபதி முன்பே ஆவேசமாக பாய்ந்து மனைவியை சரமாரியாக குத்திய கணவன்.! வெளியான அதிர்ச்சி காரணம்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சிறுவஞ்சூர் கிராமத்தில் வசித்து வருபவர் சரவணன். 44 வயது நிறைந்த இவர் மாநகர அரசு போக்குவரத்துக்கழகத்தின் டிரைவராக உள்ளார். இவரது மனைவி வரலக்ஷ்மி.

 இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மனைவியிடமிருந்து விவாகரத்து கேட்டு சரவணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அவரது மனைவி வரலட்சுமி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜீவனாம்சமாக ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சரவணன் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பின் இந்த வழக்கு நேற்று 1-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. 
அப்பொழுது இருதரப்பு வக்கீல்களும் மிகவும் ஆவேசமாக காரசாரமாக வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் நீதிபதி சிறிது நேரத்துக்கு விசாரணையை தள்ளிவைத்தார். 

இந்நிலையில் ஆவேசம் அடைந்த சரவணன்  தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனக்கு முன்னாள் அமர்ந்திருந்த மனைவி வரலட்சுமியின் மார்பில் குத்தினார்.
அப்போது கோர்ட்டில் இருந்த வக்கீல் அனைவரும் சரவணனை பாய்ந்து சென்று பிடித்துள்ளனர். ஆனால், அவர் திமிறிக்கொண்டு வரலட்சுமி மார்பில் மற்றும் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார்.

 இதையடுத்து வக்கீல்கள் அவரை சுற்றி பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வரலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனை தொடர்ந்து இதுகுறித்து சரவணனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் கூறியதாவது , கடந்த 2009-ல் இருந்து  இந்த விவாகரத்து வழக்குக்காக அலைந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இழுத்துக்கொண்டே செல்வதால்  இதுவரை  விவாகரத்து கிடைக்கவில்லை.

 அதுமட்டுமின்றி வரலட்சுமியும் ஜீவனாம்சம் கேட்டு மனு போட்டு, வழக்கை இழுத்தடிக்கிறார்.இந்நிலையில் எனக்கென ஒரு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியாமல் வயதும் அதிகமாகி கொண்டே போகிறது. என் வாழ்க்கையே நாசமாகி போனதால், வரலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்து கத்தியால் குத்தினேன்.ஆனால் அங்கு உள்ளவர்கள் அனைவரும் தடுத்து விட்டனர் என கூறியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband attack wife infront of judge


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->