விடிய விடிய பெய்த கனமழை: நீதிமன்றங்களுக்கும் இன்று விடுமுறை!  - Seithipunal
Seithipunal


சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை வலுப்பெற்றது. இதற்கு மிக்ஜம் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த புயல் சென்னைக்கு தென்கிழக்கு பகுதியில் 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் சூறாவளி காற்றுடன் விடிய விடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. 

மேலும் பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதன்மை அமர்வு நீதிபதிகள் விடுமுறை குறித்து அறிவிப்பை வெளியிடலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heavy rain courts today leave


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->