தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழக பட்ஜெட் விரைவில் தலை குப்புறக்கவிழும் - வெளியான அதிர வைக்கும் தகவல்.! - Seithipunal
Seithipunal


அரசு ஊழியர்களின் ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ஜாக்டோ ஜியோ கோரிக்கை 1: புதிய பென்சன் வேண்டாம் 2.மத்திய அரசு ஊழியர் சம்பளம் வேண்டும்.

பென்சன் என்று வரும்போதும் மட்டும் மாநில அரசின் பழைய பென்சன் திட்டம் வேண்டும். ஆனால் சம்பளம் மட்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இருக்கவேண்டும்.?இது எந்த வகையில் நியாயம்..??

2018-19 தமிழக பட்ஜெட்படி சம்பளம்:ரூ.52171கோடி(27%), பென்சன்:ரூ.25362கோடி(13%). சம்பளம், பென்சனுக்கு மட்டும் வருவாய் செலவில்(Revenue expenditure) மொத்தம் 40%.. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தினால், இது நடைமுறைக்கு வரும்போது இன்னும் பல்லாயிரம் கோடிகள் அரசுக்கு கூடுதல் செலவாக வந்துமுடியும்.

அரசின் முக்கியப் பணி என்பது 7கோடி மக்களின் குறிப்பாக அடுத்தநாள் வருமானத்திற்கு உத்தரவாதமில்லாத கோடிக்கணக்கான அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களின் நல்வாழ்வினை உறுதி செய்யவேண்டும் என்பதாக இருக்கவேண்டுமே தவிர கைநிறைய சம்பாதித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், பை நிறைய இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஊழல் அரசியல்வாதிகளுக்குத் துணைநின்றுகொண்டு பொதுமக்களை அரசு அலுவலகங்களில் அலையவைக்கும் “பெரும்பான்மையான” அரசு ஊழியர்களின்(விதிவிலக்கான மிகக் குறைவான நேர்மையாளர்கள் உண்டு என்பதை மறுக்கவில்லை) போராட்டம் எந்தவகையிலும் ஏற்க முடியாதது.

இந்த ஆண்டுதான் 7வது ஊதியக்குழு அமல்படுத்தியதன் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.14719 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டது(இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்) என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுவங்கிக்கு பயந்து ஜாக்டோ-ஜியோவின் சம்பளம்-பென்சன் தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசு அடிபணியுமானால் ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருக்கும் தமிழக பட்ஜெட் விரைவில் குப்புறக்கவிழும் வாய்ப்பு அதிகம்.

ஆகவே, போராட்டம் நடத்தும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள், முன்னணி அமைப்பாளர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்த தலைமைச் செயலாளருக்கு கடந்த போராட்டத்தின்போதே மனு அனுப்பியுள்ளோம்.

சம்பளம்-பென்சன் சலுகைக்கான போராட்டத்தில் ஈடுபட்டால் நோட்டீஸ், தற்காலிக பணி நீக்கம், நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கேட்டுக்கொள்கிறது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt employees strike affect tamilnadu economy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->