அரசு பள்ளியில் இப்படி ஒரு ஆசிரியரா??. போலீசால் கைது செய்யப்பட்ட நிலையிலும் மாணவர்களுக்கு பாடம் எடுத்த பள்ளி ஆசிரியர்!! - Seithipunal
Seithipunal



ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக நேற்று அவர்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, ஆவுடையார்கோவிலில், அறந்தாங்கி, விராலிமலை, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி போன்ற பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக பணிகளை புறக்கணித்து  சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை போலீஸார் கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்திருந்தனர். 

திருமண மண்டபத்தில், போலீஸ் காவலில் இருந்த கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் தெய்வீகன் என்பவர், தங்கள் போராட்டத்தால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக 10 மற்றும் 9ம் வகுப்பு மாணவ தலைவர்களை வரவழைத்து அவர்களிடம் இன்று மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடம் குறித்து விளக்கம் அளித்து அதனை வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு பாடமாக நடத்த அறிவுறுத்தினார். 

போராட்டத்தில்  ஈடுபட்டு கைதாகி போலீஸ் காவலில் இருந்த ஆசிரியர் மாணவர்கள் மூலமாகவே  மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆலோசனைகளை வழங்கிய நிகழ்வு அனைவரையும் நெகிழவைத்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government school teacher takking claas in police custody


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->