வனத்துறையினருக்கு  தண்ணிகாட்டிய  காட்டு யானை.!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் அருகே ஆனைகட்டி- அட்டப்பாடி வனப்பகுதியில் உள்ள கொடுங்கையாற்றின் நடுவே எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று வாயில் காயத்துடன் வெறித்தனமாக நின்றுகொண்டிருந்தது .

 இதைத்தொடர்ந்து  கேரள, தமிழக வனத்துறையினர் இணைந்து, யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்கு முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டனர் . ஆனால், திடீரென காட்டு யானை மாயமான நிலையில் காணாமல் போய்விட்டது. 

யானையை கண்டுபிடிப்பதற்காக தமிழக, கேரள வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதையடுத்து தமிழக வனத்துறையினர் மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், உதவி வன பாதுகாவலர்கள் தினேஷ்,  மாவட்ட வன அலுவலர் அசோக்குமார்,செந்தில் பெரியநாயக்கன் பாளையம் வனசரகர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் கேரள வனத்துறையினர் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து வன அலுவலர் ஜோஸ் தலைமையில் அட்டப்பாடி வனப்பகுதிகளில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து நேற்று மாலை நான்கு மணியளவில் செங்குட்டை என்ற பகுதியில் யானை கண்டறியபட்டது. உடனடியாக யானையை சுற்றி வளைக்க வனத்துறையினர் முயற்சி செய்த நிலையில், அதற்குள் மீண்டும் அந்த யானை மாயமாக மறைந்து விட்டது. 

இந்நிலையில், யானை தற்போது செங்குட்டை அருகே உள்ள ஊக்கையினூர் பகுதியில் சூழ்ந்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊக்கையினூர் பகுதியில் சூழ்ந்துள்ள யானைக்கு சிகிச்சை அளிக்க மூன்றாவது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Forest department wild elephant rescue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->