ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களாக வெப்பச் சலனம் காரணமாக தமிழகதில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவ மழையும் தொடங்கியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல்,  ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மதுரை ஆகிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் சூறைக் காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் புதிய மதகு பொருத்துவதற்கு தேவையான பொருட்கள் வந்தது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் பணிகளுக்கு தேவையான பொருட்களை நேரில் ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் புதிய மதகு பொருத்தும் பணியை  முடிக்குமாறு அறிவுத்தினார்.

புதிய மதகு பொருத்த உள்ளதால் அணையில் இருந்து கால்வாய்கள் மூலம் 1900 கன அடி நீர் இன்னும் சற்று நேரத்தில் திறக்க உள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறக்க உள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தென்பெண்ணை ஆற்று கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் பொதுப்பணிதுறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

FLOOD WARNING IN 5 DISTRICTS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->