'யாரா இருந்தாலும் வச்சு செய்வேன்!' ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிரடி!! சவால் யாருக்கு?!  - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக தங்க.தமிழ்ச்செல்வனும், அதிமுக சார்பில் துணைமுதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார்.

இதனை தொடர்ந்து, நேற்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனி மக்களவைத் தொகுதீயின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 

இதுகுறித்து அவர் சென்னையில், நான் கிளிஜோசியம் பார்த்தோ, சுடுகாட்டில் தியானம் செய்தோ அரசியல் செய்பவன் நான் அல்ல. நான் மக்களின் குறைகளை தீர்க்கும் அரசியல்வாதி. 

என்ன தான் 50 ஆண்டுகாலம் அரசியல் வாழ்க்கையில் இருந்தாலும், நான் கறைபடாத கைகளுக்கு சொந்தக்காரன். ஊழல்வாதிகளுக்கும், மதவாத சக்திகளுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் நான் தேனியில் வெற்றிபெறுவேன். 

நான் துணைமுதல்வரை கண்டு அஞ்ச மாட்டேன். ஜெயலலிதாவையே எதிர்கொண்டவன். சொந்த ஊரிலேயே அவரது மகனை நான் தோற்கடிப்பேன்." என அவர் கூறியுள்ளார். 

இவ்வாறு அவர் அதிமுக வேட்பாளரை விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மற்றொரு வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வனை பற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பது அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என உணர்த்தவா? 

மும்முனை போட்டி என கூறிவரும் வேளையில் தினகரன் கட்சியினை தனக்கு நிகரான போட்டியாளராக இளங்கோவன் கருதவில்லை என்பதை குறிக்கிறதா என அரசியல் விமர்சகர்கள் பலர் கூறிவருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan open challenge for ravindhranath


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->