கடுமையான பசி., பாத்திரம் ஏந்தியும் பலனில்லை.!! கட்டையை தூக்கியதால் நடந்த சம்பவங்கள்.!! - Seithipunal
Seithipunal


 

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் 'கொன்னமரத்து அய்யன்' கோவில் உள்ளது. போர்வை வியாபாரியான கந்தசாமியும், வெற்றிலை வியாபாரி பெரியசாமியும் வியாபாரம் செய்வதற்காக அந்தியூருக்கு வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலில் படுத்து உறங்க, அருகிலேயே கோவில் காவலரான வடிவேலும் உறங்கினார்.

ஆப்பப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த நல்லசாமி  என்பவர் நள்ளிரவில் அங்கு வந்து கோவிலில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து தூங்கிக்கொண்டு இருந்த பெரியசாமியை தாக்க,இதனால் அதிர்ச்சி அடைந்து எழுந்த அவர் அலறியபடி அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும், ஆத்திரம் அடங்காத நல்லசாமி,மற்ற இருவரையும் தலையில் கட்டையால் அடிக்க இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பிச்சென்ற நல்லசாமி, குமார் என்பவரிடமும் பணம் கேட்டு மிரட்டி அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் குமார் மயங்கி கீழே விழ, இதைப்பார்த்த பொதுமக்கள் நல்லசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அந்த விசாரணையில்., எனக்கு துணையாக மனைவி இல்லாததன் காரணமாக தனியாக வசித்து வரும் எனக்கு சாப்பிடுவதற்கு உணவு ஏதும் கிடைப்பதும் இல்லை யாரும் வழங்குவதும் இல்லை. மேலும்., எனது ஊர் முழுதும்., பிற ஊர்களுக்கு சென்றும் சாப்பாடு கேட்ட போது உணவு வழங்க மறுத்தனர். 

இந்நிலையில்., உணவு சாப்பிடுவதற்காக கோவிலுக்கு சென்ற நான் கந்தசாமி மற்றும் வடிவேலிடம் பணம் கேட்ட போது அவர்கள் வழங்க மறுத்தனர்., இதனால் கடும் ஆத்திரமடைந்த நான் வீட்டிற்கு சென்று வைத்திருந்த மூங்கில் கம்பை கொண்டு அவர்களை அடித்து கொலை செய்தேன்.  

மேலும் அங்கிருந்த சாந்தியபாளையத்தை சார்ந்த பெரியசாமியை கட்டையால் தாக்கிய போது அவர் சென்று அங்குள்ள பகுதியில் ஒழிந்தார். இருந்தாலும் எனக்கு ஆத்திரம் குறையாததன் காரணமாக அதே பகுதியை சார்ந்த குமாரையும் கத்தியால் கொலை செய்தேன். இந்த கொலைகள் அனைத்தும் சாப்பாடு கிடைக்கவில்லை என்ற வெறியில் செய்தேன் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode murder investication result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->