காரை மடக்கிய பறக்கும் படை: பவுடர் தான்... பூசிக் கொள்கிறீர்களா... மன்சூர் அலிகானின் அல்டிமேட் காமெடி.! - Seithipunal
Seithipunal


வேலூர் பாராளுமன்ற தொகுதியின் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தொகுதியில் பிரசாரம் செய்து வருகிறார். பிரசாத்தின் போது அவர் சொல்லும் காமெடி மக்கள் தானாக சிரிக்கும் அளவிற்கு உள்ளது. 

குடியாத்தம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மன்சூர் அலிகான் காரில் சென்று கொண்டிருந்தபோது பறக்கும் படையினர் காரை சோதனை செய்தனர். 

அப்போது காரில் எதுவும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பான விவரங்களை பறக்கும் படையினர் சேகரித்தனர். 

இந்நிலையில் மன்சூர் அலிகான் முகத்துக்கு போடும் பவுடர் தான் இருக்கிறது. பூசி கொள்கிறீர்களா என அதிகாரிகளை பார்த்து கேட்டுள்ளார். இதனை கேட்டு அதிகாரிகள் சிரித்துக் கொண்டே காரை விடுவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election officers search Mansooralikhan car


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->