கையோடு சிக்கிய திமுகவினர்.. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல் - வெளியானது ஆதாரம்.! - Seithipunal
Seithipunal


கோவையில்  ஓட்டு கேட்பின் போது வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா, பெருமாள் புதூரைச் சேர்ந்தவர் கு. சண்முகசுந்தரம்.

விவசாயம், பின்னலாடை ஏற்றுமதி மற்றும் செங்கற்கள் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். மடத்துக்குளம் தளபதி தொழில்நுட்ப பயிற்சி மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.

பொள்ளாச்சி, உடுமலை, கிடத்துக்கடவு ஆகிய ஊர்களில் மாணவ, மாணவியருக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

திமுகவின் பொறியாளர் அணி மாநில துணைத் செயலாளராக பதவி வகித்து வரும் சண்முகசுந்தரம், ஏற்கனவே, கடந்த 2009ம் ஆண்டு பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டுள்ளார்.

தற்போது திமுக சார்பில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று திமுக வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

அப்போது வாக்களர்களுக்கு ஓட்டுக்கு 250 ரூபாய் பண வினியோகம் செய்து வாக்கு சேகரித்து வருவதாகவும், தேர்தல் சட்ட விதிகளை மீறி ஆட்டோ மற்றும் அதிகளவு இருசக்கர வாகனத்தில் பிரசாரம் செய்து வருவதாகவும் கூறி அதிமுக வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்தனர்.

மேலும், இவர்கள் மீது தேர்தல் வீதிமீறல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Complain-against-the-DMK-who-distributed-money-to-voters-in-Coimbatore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->