சென்னை எக்மோர் டு மதுரை சந்திப்பிற்கு விரைவு மினி விமான பயணம்.! சோதனை ஓட்டம் வெற்றி.!! கொண்டாட்டத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் அதிகளவில் தென்மாவட்ட மக்கள் பணியாற்றி வருகின்றனர்., இவர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்கு சென்று வருவதற்கு பேருந்துகளையும்., இரயில் போக்குவரத்தையும் அதிகளவில் உபயோகம் செய்து வருகின்றனர். 

மேலும்., சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அதிகளவில் இரயில்களை இயக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற தென்னக இரயில்வே நிர்வாகத்தின் மூலம் அதிநவீன சொகுசு மற்றும் விரைவு இரயிலான "தேஜஸ்" அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த இரயில் திட்டத்தை வரும் 27 ம் தேதியன்று பிரதமர் மோடி மதுரையில் கொடியசைத்து துவக்கி வைக்கவிருக்கும் நிலையில்., இரயிலின் சோதனை ஓட்டமானது நடைபெற்றது. 

சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக விழுப்புரம் வரை மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்டத்தின் போது இரயிலின் சிறப்பம்சங்கள் அனைத்தும் சரி வர இயங்குகிறதா?., இரயிலில் அதிர்வுகள் ஏதேனும் உள்ளனவா? என்று சோதனை மேற்கொண்டனர். 

இந்த இரயிலில் 18 ஏ.சி பெட்டிகள்., 2 உயர் வகுப்பு ஏ.சி பெட்டிகள் என்று இரயிலில் மொத்தமாக  1500 பேர் வரை பயணம் செய்யலாம். இந்த இரயில் உள்ள உள்புற அமைப்புகள் அனைத்தும் சர்வதேச தரத்திலும்., விமானத்தில் இருப்பது போன்றே இருக்கைகளில் சிறிய ரக திரைகள் இருக்கும்., அதில் பாடல்கள் அல்லது விடியோக்கள் பார்க்கலாம். 

இரயிலின் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயணம் செய்தது., இதன் மூலம் அதிகளவு பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai to Madurai theks express


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->