சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி! - Seithipunal
Seithipunal


சென்னையில், ஆண்டுதோறும் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே  வரும் நிலையில், 4 முதல் 5 வருடங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

கடைசியாக 2018 -ஆம் ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடத்திய போது, சென்னையில் மொத்தமாக 57 ,366 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்தது. 

இந்த நிலையில், 5 வருடங்களில் 2 மடங்காக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டு தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் கலந்தய்வு செய்து, இதற்காக விரிவான திட்டம் கொண்டுவர உள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கிறது. 

இதற்காக அரசு சாரா நிறுவனங்களுடன் பல்வேறு விலங்கு நல உரிமை அமைப்புகளுடனும் கலந்தாய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக இனக்கட்டுப்பாடு சிகிச்சை  அளிக்க ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENNAI STREET DOG CENSUS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->