தடை! அதனை உடை! தமிழக அரசை எதிர்த்து சாதித்த அன்புமணி! - Seithipunal
Seithipunal


தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க சென்றார்.  காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் அவருக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் அரூர் பகுதியில்  கருத்து கேட்க அனுமதி வழங்கவில்லை. 

ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி நிர்வாகமும் இல்லை. இந்நிலையில் இப்பகுதி மக்களின் ஒரே பிரிதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான கண்டிக்க கூடிய செயல் என்று அன்புமணி கூறியிருந்தார். 

இது குறித்து நாடாளுமன்ற சபாநாயகருக்கும், நாடாளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். நீதிமன்றம் மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன் என்றும்  அன்புமணி கூறியிருந்தார். 

அன்புமணி கூறியபடி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்கவிடாமல் தர்மபுரி தொகுதி எம்.பி. அன்புமணி ராமதாசை தடுப்பது ஏன் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்தது அப்போது பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துதல் தொடர்பாக அன்புமணிக்கு தடைவிதிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அவரது சொந்த தொகுதிக்குள் செல்லவிடாமல் தடுக்கும் மாநில அரசின் முடிவு அதிகார துஷ்பிரயோகம் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

மேலும் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துதல் தொடர்பாக அன்புமணிக்கு அனுமதி வழங்க  தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. 

அனுமதி கிடைத்த காரணத்தினால் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று  சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க சென்று மக்களை சந்தித்துள்ளார். தமிழக அரசு விதித்த தடையை உடைத்து அவர் சொன்னபடியே மக்களை சந்தித்து சாதித்துள்ளார்.  மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகு  சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் குறித்து அடுத்து என்ன நடவடிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளதாக கூறபடுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anbumani meet dharmapuri people for eightway green road plan


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->