சாமி தரிசனம் செய்துவிட்டு வந்தவர்கள் வேனில் லாரி மோதி , அப்பளம் போல் நொறுங்கிய வேன்.! அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!. - Seithipunal
Seithipunal



ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் டெம்போ டிராவலர் வேனில் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு  ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக நேற்று பகலில் வேனில் புறப்பட்டனர். 

அவர்கள் சென்ற வேன் நேற்று மதியம் 2.15 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைகோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி நோக்கி ஒரு டிரெய்லர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த டிரெய்லர் லாரியும் வேனும் திடீரென்று நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

அங்கு நடந்த கோர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கதறி அலறல் சத்தம் போட்டுள்ளனர். அதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருமயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், புதுக்கோட்டை திருமயத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடலை பிரேத பரிசோதனை செய்து தெலங்கானாவிற்கு எடுத்து செல்வதற்கான அனைத்து செலவுகளையும் தமிழக அரசே ஏற்கும். விபத்து நடந்த திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அவசர சிகிச்சை கால பிரிவு உடனடியாக தொடங்கப்படும்  என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

accident in pudukkottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->