இராமலிங்கம் குடும்பத்திற்கு 56 லட்சம் நிதியுதவி!! இந்து அமைப்புக்களுக்கு நன்றி கூறிய எச்.ராஜா!!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் மதமாற்றத்தை எதிர்த்ததற்காக கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

பின்னர் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. அதன்பின்னர் இந்து அமைப்பு சார்பாக தொகை வசூலிக்கப்பட்டு அந்த குடும்பத்திற்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றது. 

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், " Hindu political action committee என்கின்ற உலகளாவிய இந்துக்கள்  கூட்டமைப்பின் மூலம்  திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராமலிங்கம் அவர்களின் குடும்பத்திற்கு 56 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த இந்து உணர்வாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்." என தெரிவித்துள்ளார். 

அதற்கு இந்து அமைப்பை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பேற்று குறுகிய நாட்களில் அதிகப்படியான தொகையை வசூலித்து அந்த குடும்பத்திற்கு வழங்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

56 lacks fund for ramalingam family from hindu organisation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->