கொந்தளிப்பை ஏற்ப்படுத்திய அரசின் அறிவிப்பு - விவசாய சங்கம் எடுத்த அடுத்தகட்ட முடிவு..? 2000 ரூபாய் செய்யும் சித்து விளையாட்டு..! - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளமக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.2000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் ஒவ்வொரு ஊராட்சியில் மிகக் குறைவான பயனாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வறுமைக் கோட்டில் கீழ் உள்ளவர்கள் பெயர் பட்டியலில் பதிவு செய்யப்படவில்லை

கும்பகோணம் ஒன்றியம் உத்தமதானி, நீலத்தநல்லூர், திருப்புறம்பியம், கொத்தங்குடி போன்ற பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் சில நபர்களை மட்டும் பதிவுசெய்து முறையான தகுதியுள்ளவர்களுக்குப் பெயர்பட்டியலில் இடம்பெறவில்லை.

இதனால் பொதுமக்கள் தன்னெழுச்சியாகத் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தலைமையில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் அரசு அறிவித்தரூ.2000 வழங்க வேண்டும் என உத்தமதானி ஊராட்சியில் 73 மனு, நீலத்தநல்லூரில் 75 மனு, தேவனாஞ்சேரியில் 66 மனு உள்படப் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்கள், கும்பகோணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

தகுதியானவர்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்க வேண்டும்.இல்லையெனில் மக்களைத் திரட்டி விவசாயத் தொழிலாளர் சங்கச் சார்பில் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 rupees issue make conflict


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->