டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி.. கேப்டன் ரோகித் சர்மாவுக்கு புதிய போஸ்டர் வெளியிட்ட ஐசிசி.! - Seithipunal
Seithipunal


டி20 மற்றும் ஒரு நாள் உலகக்கோப்பை போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

இதில், முதலாவது உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் (7-11) மாதம் இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் விளையாட இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோபியை கைப்பற்ற மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு புதிய போஸ்டர் ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய வீரர்கள் பட்டியல்

இந்திய அணி வீரர்கள்

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், இஷான் கிஷன் உனத்கட், ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ்.

பரிசுத்தொகை

இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் அணிக்கு 13.2 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு 6.5 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World test championship final ICC release Rohit Sharma poster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->