டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிகளின் அட்டவணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெறும் மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் போதும் பயிற்சி போட்டிகளின் நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி இன்று மும்பை விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் ஜாஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பும்ராவுக்கு பதிலான மாற்று வீரர் மற்றும் காத்திருப்பு பட்டியல் வீரர்களான முகம்மது ஷமி, தீபக் சஹார், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வரும் அக்டோபர் 11ம் தேதி ஆஸ்திரேலியா செல்ல உள்ளனர். மேலும், பும்ராவுக்கு பதிலாக முகம்மது சிராஜ் அல்லது உம்ரான் மாலிக் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெறும் மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் போதும் பயிற்சி போட்டிகளின் நேரம் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பெர்த்தில் இந்திய அணியின் பயிற்சி மற்றும் பயிற்சி போட்டிகளின் அட்டவணை மற்றும் நேரங்கள்:-

அக்டோபர் 8 மற்றும் 9ம் தேதி காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரை இந்திய அணியின் வலைப்பயிற்சி.

அக்டோபர் 10ம் தேதி காலை 9.15  மணிக்கு இந்திய அணியின் செய்தியாளர் சந்திப்பு.

அக்டோபர் 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் முதல் பயிற்சி போட்டி.

அக்டோபர் 12ம் தேதி காலை 8.30 முதல் மதியம் 1.30 வரை வலைப்பயிற்சி.

அக்டோபர் 13ம் தேதி மாலை 4.30 வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் 2வது பயிற்சி போட்டி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Indian team practice and warm up match schedule


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->