அடுத்த தோனிங்க அவரு... புகழ்ந்து தள்ளிய சுரேஷ் ரெய்னா! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கடந்த 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளதால், இந்த உலகக் கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெல்லும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில், ரோஹித் ஷர்மா தான் இந்திய அணியின் அடுத்த எம்.எஸ் தோனி என்று, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "எனக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய அணி வீரர்களுடன் பேசி வருகிறேன். அந்த வாய்ப்பை நான் தவற விடுவதில்லை.

இந்திய அணி வீரர்களிடம் நான் பேசிய வரை, முன்பு தோனிக்கு எவ்வாறு இந்திய அணியில் வீரர்கள் மரியாதை கொடுக்கிறார்களோ, அதே போல இப்போது ரோகித் ஷர்மாவுக்கு மரியாதை கொடுப்பதை புரிந்து கொண்டேன்.

மேலும் நான் கேள்விப்பட்டவரை ரோகித் ஷர்மா அணி வீரர்களுடன் நட்பாகவும், சீனியர் ஜூனியர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் சரியான மனநிலையுடன் கலகலப்பாக வைத்துக் கொள்வதாக சொல்கின்றனர்.

யார் பேசினாலும் காது கொடுத்து கேட்கும் ரோகித் ஷர்மா, வீரர்களுக்கும் தன்னம்பிக்கை அளித்து அணியை வழி நடத்தக்கூடிய ஒரு நல்ல தலைவர். 

இது அனைத்துமே அவரை சிறப்பாக செயல்பட வைக்கிறது. ரோஹித் ஷர்மாவின் இந்த தலைமை பண்புகளை நான் தோனியுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். 

ஒரு கேப்டனாக வீரர்களை சரியாக வைத்துக் கொள்வதும், அவர்களின் மரியாதை பெறுவதுமே அவர் அடுத்த தோனி என்பதை நினைக்க வைக்கிறது. என்னை பொறுத்தவரை அடுத்த எம்.எஸ் தோனி ரோகித் ஷர்மா தான்" என்று சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Rohit Sharma MS Dhoni Suresh Raina 


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->