வாய் விட்டு சிக்கிய ரோஹித்! எதுக்கு இந்த  பொழப்பு! இதுவே தோனியா இருந்தா?!   - Seithipunal
Seithipunal


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்திருந்தாலும். அதனை பெரிதாக இந்திய ரசிகர்கள் கொண்டாடவில்லை.

காரணம் எளியவனை வலியவன் அடித்தால், நீதிமான் எளியவன் பக்கமே நிற்பான் என்ற கூற்றுப்படியே, இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் வெற்றியை அணுகி உள்ளனர் என்று சொன்னால் மிகையாகாது.

ஆனால், இந்த வெற்றிக்கு பின்னர் ரோகித் சர்மா அளித்த பேட்டி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன தான் சொன்னார் ரோகித் ஷர்மா?

"150 ரங்களின் வெஸ்ட் இண்டீஸ் அணியை அவர்களின் சொந்த மண்ணில் சுருட்டியது "massive" என்ற ஒரு வார்த்தையை ரோஹித் சர்மா குறிப்பிட்டது தான் அந்த சர்ச்சைக்கு காரணமே.

massive வெற்றி என்று சொல்லும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி என்ன பலமான ஒரு அணியா என்ன? 

உலகில் மிக பலவீனமான ஒரு அணி,  உலக கோப்பை ஒரு நாள் தொடரில் தகுதிப் பெறாமல் வெளியேறியுள்ள ஒரு அணி,
ஸ்பான்சர் செய்வதற்கு கூட ஆள் இல்லாமல் தவிக்கின்ற ஒரு அணி தானே இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி.

இப்படி தடுமாறி, தடம் இழந்து, பலம் இழந்து, அழியும் நிலையில் உள்ள ஒரு அணியை வீழ்த்தியதை massive வெற்றி என்று ரோகித் சர்மா கொண்டாடுவது சரியா? என்று, பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுவே இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்திருந்தால், இந்த வெற்றியை எல்லாம் பெரிதாக அவர் பேசிகூட  இருக்க மாட்டார். 

இன்னும் சொல்லப்போனால் பேட்டி கொடுப்பதற்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுடன் உட்கார்ந்து, எப்படி விளையாட வேண்டும்? என்ன செய்ய வேண்டும், உங்கள் மனநிலை எப்படி இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்க சென்று இருப்பார் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

எது எப்படியோ! அறிமுக டெஸ்ட்டிலேயே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நம்ம நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தான் இந்த ஆட்டம் என்று மரண ஆட்டம் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvsWI test match Rohit Sharma loose talk compare with MS Dhoni


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->