அன்னைக்கு 5 க்கு 3 விக்கெட், இன்னைக்கு 2 க்கு 3 விக்கெட்! ஆஸியின் வேகத்தில் சரிந்த இந்தியா!  - Seithipunal
Seithipunal


இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா ஆஸ்திரேலியா அணிகள்  மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டி தேர்வு செய்தது. ஆஸி 199 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்தியா எளிதாக வெற்றி பெரும் என நினைத்தால், 2 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து பரிதாப நிலையில் இருக்கிறது. 

ஆடுகளம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என கருதி ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்த நிலையில், ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்ததையடுத்து, பேட்டிங் கடினமாக இருந்தது. டேவிட் வார்னர் 41 ரன்களிலும் ஸ்டிவன் ஸ்மித் 46  ரன்களிலும் ஆட்டம் இழக்க அடுத்து வந்த ஆஸ்திரேலியா வீரர்கள் வரிசையாக வெளியேற ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய  ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும், குல்திப் யாதவ், ஜஸ்டின் பும்ரா தலா இரண்டு விக்கெட்களையும், முகமது சிராஜ், ஹார்டிக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். 

மிகச் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 2 மெய்டன்களுடன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 28 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். ஜடேஜா ஸ்டீவன் ஸ்மித், லபூஷனே, அலெக்ஸ் காரே ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் சரிவுக்கு வித்திட்டார். இறுதி நேரத்தில் கேப்டன் கம்மின்ஸ் 15 ரன்கள், மிச்சேல் ஸ்டார்க் 28 ரன்கள் அடித்து அணியை 199 என்ற ஒரு கௌரவமான ரன்களை எடுக்க வைத்தனர். 

எளிய இலக்கு தானே இந்தியா எளிதாக வெற்றி பெறும் என நினைத்தவர்களுக்கு எல்லாம் தலையில் பேரிடியாக விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் அடுத்தடுத்து டக் அவுட் ஆக, அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் நான் மட்டும் விதிவிலக்கா என்ன டக் அவுட் ஆகி வெளியேறினார். 

மூன்று பேருமே டக் அவுட் ஆக அண்ட் இரண்டு ரன்கள் எங்கிருந்து வந்தது என நீங்கள் கேட்கலாம், மறுமுனையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோலியாலும் அந்த ரன்கள் எடுக்கப்படவில்லை. உதிரி வகையில் ஆஸ்திரேலியாவினால் கொடுக்கப்பட்டது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு அரையிறுதி போட்டிதான் இந்தியா ஆடிய கடைசி உலகக்கோப்பை போட்டி ஆகும். அந்த போட்டியில் இந்தியா 5 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருக்கும். ஆனால் இன்றோ நல்ல முன்னேற்றமாக 2 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்து தவிக்கிறது. 

ரோஹித் ஷர்மாவுக்கு கொஞ்சம் கடினமான பந்து என்று சொன்னாலும், இஷான், ஸ்ரேயாஸ் ஆட்டமிழந்த விதத்தினை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆடுகளத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் விளையாட இது 20 ஓவர் போட்டி அல்ல என யாராவது அவர்களிடம் சொல்வார்களா?!  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India top 3 batsmen scored duck and struggle to get run against Australia


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->