ஒரு பந்தில் வில்லன் ஆன கார்த்திக்! ஏன் என்பதற்கான காரணத்தை வெளியிட்ட தினேஷ் கார்த்திக்! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டிகளில் தொடரை வெல்ல போவது யார் என்ற பரபரப்பான ஆட்டத்தில் இறுதி ஓவரில் மூன்றாவது பந்தில்  ஒரு ரன் ஏன் எடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பகிரங்கமாக விமர்சிக்கப்பட்டார். அந்த போட்டியில் இறுதி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்தியாவால் 11 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அந்த ஒரு ரன் ஏன் எடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஒரு நடுவரிசை ஆட்டக்காரரான நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதனால் அடுத்த பந்தை சிக்சருக்கு அடிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், அதனால் என்னால் ரன் எடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.  பந்துவீச்சில் ஏதேனும் பிழை இருந்தால் அந்த ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக மாற்றியிருக்கலாம். ஆனால் சவுத்தி போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் வீசும்பொழுது பிழைகள் எதிர்பார்க்க முடியாத ஒன்றுதான் எனவும் அன்றைய நாள் எனக்கான நாளாக இல்லாமல் போய்விட்டது என அவர் தெரிவித்துள்ளார். 

மற்றபடி வெற்றிகரமாக முடிப்பதில் நான் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். அன்று இன்னும் ஓரு சிக்சர் எடுத்து இருந்தால் நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும் என தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். கிரிக்கெட் என்பது இப்படித்தான், ஆட்டம் எப்படி வேணாலும் அமையலாம். ஆட்டம் நமக்கு சாதகமாக மட்டும் இல்லாமல் சில் நேரம் அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அந்த சூழ்நிலையை உணர்ந்து அணியினர் எனக்கு ஆதரவளித்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆட்டத்தில் அவரும் க்ருனால் பாண்டியாவும் சிறப்பாக விளையாடியதாகவே அவர் குறிப்பிட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dinesh karthik explanation for the without run ball


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->