இந்தியாவை சேர்ந்த கரன்தீப் ஆனந்த், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில்!! - Seithipunal
Seithipunal


கரன்தீப் ஆனந்த், 15 ஆண்டுகளாக ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தில் பணியாற்றி விட்டு, பின்னர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் சேர்ந்த இந்தியர். இவர் ‘பேஸ்புக்’ ல் ஆடியன்ஸ் நெட்வொர்க், மார்க்கெட் பிளேஸ், ஆட் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஏற்கனவே பணிபற்றி வந்தார்.

தற்பொழுது, ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் ‘வொர்க் பிளேஸ்’ என்னும் நிறுவன தகவல்தொடர்பு பிரிவின் முதன்மை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும், “கரன்தீப் வொர்க்பிளேஸ் தலைமை பதவிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். அவர் நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பின்னணியில் மிகுந்த அனுபவம் பெற்றிருப்பவர். அவர் எங்களுடன் சேர்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என அதன் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த பதவி உயர்வு பற்றி கரன்தீப் ஆனந்த், “உலகமெங்கும் உள்ள நிறுவனங்களுக்கு வொர்க்பிளேஸ்சை கொண்டு செல்வதில் நான் ஒரு அங்கமாக இருக்கப்போகிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறி தனது மகிழ்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian in head post of facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->