இணையத்தில் வைரலாகும் #SaturdayMotivation.! வைத்து செய்யும் நெட்டிசன்கள்.!! சனிக்கிழமையும் லீவு கிடையாதா?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள நவீன காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கான கருத்துக்களை இணையதளங்களில் பதிவு செய்து அதன் மூலம் பல பின்தொடர்பாளர்களை தங்கள் வசம் தக்கவைத்து வருகின்றனர். அதன் வகையில்., அவ்வப்போது இணையத்தில் அந்தந்த திரைப்படங்கள் வெளியீடு., அரசியல் விமர்சனம்., அரசியல்வாதிகளின் வருகை குறித்த டேக்குகள் அதிகளவில் அன்றைய நாளில் ட்ரெண்டிங் ஆவது உண்டு. 

அந்த வகையில்., இன்றைய நாளில் ட்விட்டர் பக்கத்தில் #SaturdayMotivation என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது. இந்த சனிக்கிழமையின் நாளை சிறப்பிக்கும் வகையில் சில புகைப்படங்களை இணையதள மக்கள் எடுத்து பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில்., நெட்டிசன்களால் சனிக்கிழமை என்றாலே #சனிக்கிழமைபிரதமர் என்ற டேக்குகள் வைரலாக்கப்பட்டு வருகிறது. 

ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும்., வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று தற்போதைய ஆட்சியை வீழ்த்துவதற்காக மேற்கு வங்காளத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில்., அனைத்து எதிர்க்கட்சியும் ஓரணியில் திரண்டு பெரும் பேரணியை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா., திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரான ஸ்டாலினை சனிக்கிழமை பிரதமர் என்று தெரிவித்தார். 

நமது மீம் தயாரிப்பாளர்களுக்கு பாயிண்ட் கிடைக்காமல் தவித்து கொண்டு இருந்த நிலையில்., இந்த செய்தியை கேட்ட மீம் தயாரிப்பாளர்கள் தங்களின் கைவண்ணத்தில் பல மீம்களை தயாரித்து வளம் வர செய்தனர். இந்நிலையில்., வார வாரம் வரும் சனிக்கிழமையின் போது #சனிக்கிழமைபிரதமர் டேக்குகளின் கீழ் பல மீம்களை தயாரித்து பதிவிட துவங்கினர்.  



 

இந்த பதிவு #SaturdayMotivation மூலமாக தேடும் சமயத்தில் கிடைத்தது., அவர்களின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. ஆனால் அலைபேசியை அதிர்வு முறையில் வைத்து சார்ஜ் ஏற்றும் சமயத்தில் கீழே விழுந்துவிடாத என்ற சந்தேகம் இருக்கும்., அதனை சோதித்து பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். 



இவ்வாறாக இணையதள நெட்டிசன்கள் தங்களின் கைவண்ணத்தில் மீம்களை தயாரித்து பதிவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in twitter trending now SaturdayMotivation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->